ADDED : பிப் 26, 2010 03:08 PM

* நம்பிக்கை இருக்குமிடத்தில் அன்பிருக்கும். அன்பிருந்தால் அங்கே அமைதியும், சத்தியமும் குடிகொள்ளும். சத்தியம் இருக்குமிடத்தில் கடவுள் வீற்றிருப்பார். எங்கே கடவுள் இருக்கிறாரோ அங்கே ஆனந்தம் நிலைபெறும்.
* உங்கள் எண்ணங்கள் நல்லவையாக இல்லாவிட்டால், உங்கள் சொற்கள் இனிமையாக இல்லாவிட்டால், கடவுள் மகிழ்ச்சியடைய மாட்டார். எப்போதும் மனதை உயரிய நிலையில் வைத்துக் கொண்டு பணியாற்றுங்கள்.
* மனிதனுக்குரிய அடிப்படை பண்பினை நாம் இழந்து வருகிறோம். பணம், பதவி, அதிகாரம் என்று நம் மனம் மிருக நிலைக்கு தாழ்ந்து விட்டது. அன்புக்கடலான கடவுளை உணர்ந்தால் மட்டுமே இந்த இழிநிலை மாறும்.
* தேவைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். ஆசைகளைக் குறைந்தபட்ச அளவுக்குள் கொண்டு வாருங்கள். கிடைத்ததைக் கொண்டு மனநிறைவுடன் வாழப் பழகிக் கொள்ளுங்கள்.
* சிந்தித்த எல்லாவற்றுக்கும் உடனே சொல்வடிவம், செயல்வடிவம் கொடுக்காதீர்கள். சொற்களைத் தேர்ந்துஎடுத்து யோசித்துப் பேச வேண்டும். பயன் கருதி சரியான செயல்களுக்கு மட்டும் வடிவம் கொடுக்க வேண்டும்.
- சாய்பாபா